இந்திய ராணுவத்தின் திறனையும், வீரத்தையும் ஒவ்வொருவரும் நம்புகின்றனர்.. பிரதமரை தவிர… ராகுல் காந்தி தாக்கு

இந்திய ராணுவத்தின் திறனையும், வீரத்தையும் ஒவ்வொருவரும் நம்புகின்றனர்.. பிரதமரை தவிர… ராகுல் காந்தி தாக்கு

பொருளதாரம், லடாக் மோதல், கொரோனா வைரஸ் கையாளுதல் போன்ற விவகாரங்களில், பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் திறனையும், வீரத்தையும் ஒவ்வொருவரும் நம்புகின்றனர். பிரதமரை தவிர என ராகுல் காந்தி மோடியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் திறனையும், வீரத்தையும் ஒவ்வொருவரும் நம்புகின்றனர்.. பிரதமரை தவிர… ராகுல் காந்தி தாக்கு

இது தொடர்பாக ராகுல் காந்தி மற்றொரு டிவிட்டில், இந்திய ராணுவத்தின் திறனையும், வீரத்தையும் எல்லோரும் நம்புகிறார்கள். பிரதமரை தவிர…. யாருடைய கோழைத்தனம் சீனாவை நம் நிலத்தை எடுக்க அனுமதித்தது. யாருடைய பொய்கள் அவர்கள் அதை வைத்திருப்பதை உறுதி செய்யும் என பதிவு செய்து இருந்தார்.

இந்திய ராணுவத்தின் திறனையும், வீரத்தையும் ஒவ்வொருவரும் நம்புகின்றனர்.. பிரதமரை தவிர… ராகுல் காந்தி தாக்கு

சில மணி நேரங்கள் கழித்து மற்றொரு டிவிட்டில், இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகின்றன. அவர்கள் அதன் மூலம் போலி செய்திகளையும், வெறுப்பையும் பரப்பி வாக்காளர்களிடம் ஆதிக்கம் செலுத்த பயன்படுத்துகிறார்கள். இறுதியாக அமெரிக்க ஊடகங்கள் பேஸ்புக் பற்றிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளன என பதிவு செய்து இருந்தார். மேலும் அதனுடன், அமெரிக்க பத்திரிகையில் பேஸ்புக் தொடர்பான வெளியான செய்தியையும் பதிவேற்றம் செய்து இருந்தார்.