• April
    09
    Thursday

Main Area

Main



கஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகருக்கு ரூ. 10 லட்சத்தில் வீடு கட்டிக்கொடுத்த ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் கஜா புயலால் வீடு இழந்த சமூக சேவகருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவர் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகிறார். சுனாமி, தானே புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு ரூ.15 லட்சத்துக்கும் மேல் நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். 

மேலும் இவர் 108 ஆம்புலன்ஸ் சேவை போல இலவச கார் சேவை செய்து வருகிறார். பிரசவம், அவசர சிகிச்சையோ என்றால் கணேசனுக்கு போன் செய்தால் போதும் உடனே சம்பவ இடத்திற்குத் தனது காரில் சென்று உதவி செய்துவிடுவார். இவரது சமூக சேவையைப் பாராட்டி பெங்களூருவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.

lawrence

இந்த நிலையில் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது  ஆலங்குடியில் மிகச்சிறிய வீட்டில் வசித்து வந்த கணேசனின் வீடு புயலில் பலத்த சேதமடைந்தது. வீட்டை இழந்த அவர் தங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தார். இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆலங்குடிக்கு சென்றிருந்த ராகவா லாரன்ஸ், சமூக சேவகர் கணேசனின் பற்றி தெரியவந்தது. பின்னர் அவர்க்கு ரூ. 10லட்சம் செலவில் புதிய வீடு ஒன்றைக் கட்டி கொடுப்பதாக உறுதியளித்தார். 

lawrence

அதன்படி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த வீடு கட்டும் பணி தற்போது முடிவடைந்து, நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு வீட்டை திறந்து வைத்தார். தனக்கு வீடு கட்டி கொடுத்து உதவிய லாரன்சுக்கு கணேசன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.