ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை.. லவ் லெட்டர் வந்துள்ளதாக ஆம் ஆத்மி கிண்டல்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை.. லவ் லெட்டர் வந்துள்ளதாக ஆம் ஆத்மி கிண்டல்

மோடி அரசாங்கத்தின் விருப்பமான விசாரணை அமைப்பிடமிருந்து ஆம் ஆத்மிக்கு லவ் லெட்டர் வந்துள்ளது என்று அமலாக்கத்துறை (ஆம் ஆத்மி தேசிய செயலாளருக்கு சம்மன்) அனுப்பிய நோட்டீஸை அந்த கட்சி கிண்டல் அடித்துள்ளது.

பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தாவுக்கு செப்டம்பர் 22ம் தேதியன்று விசாரணைக்கு வரும்படி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மோடி அரசாங்கத்தின் விருப்பமான விசாரணை அமைப்பிடமிருந்து ஆம் ஆத்மிக்கு லவ் லெட்டர் வந்துள்ளது என்று அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸை அந்த கட்சி கிண்டல் அடித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை.. லவ் லெட்டர் வந்துள்ளதாக ஆம் ஆத்மி கிண்டல்
அமலாக்கத்துறை

ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சதா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ், கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவரை செப்டம்பர் 22ம் தேதியன்று விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளது. பா.ஜ.க.வால் ஆம் ஆத்மி கட்சியை தேர்தல் ரீதியாக கொல்ல முடியாது. எனவே ஆம் ஆத்மியின் குணத்தை கொல்ல முயற்சி செய்கிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை.. லவ் லெட்டர் வந்துள்ளதாக ஆம் ஆத்மி கிண்டல்
ராகவ் சதா

ஆம் ஆத்மி கட்சியை துன்புறுத்தும் முடிவில்லாத முயற்சியில், மோடி அரசாங்கத்தின் விருப்பமான விசாரணை அமைப்புக்கு (அமலாக்கத்துறை) அழுத்தம் கொடுக்கப்பட்டு, ஆம் ஆத்மிக்கு ஒரு காதம் கடிதத்தை (சம்மன்) அனுப்பியுள்ளது. பஞ்சாப், கோவா, உத்ரகாண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி எழுச்சி கண்டு வருவதை கண்டு மோடி அரசு பயப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.