ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து

 

ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து

பூர்வராகங்கள் படத்தின் மூலமாக திரையுலகில் காலடி எடுத்து வைத்த ரஜினிகாந்துக்கு இது 45 ஆண்டு நிறைவு. 18.8.1975ல் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்தது அபூர்வராகங்கள்.

45ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, #ரஜினி-45, என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரண்டாகிறது. நடிகர்கள் மோகன்லால், ராகவா லாரன்ஸ், இயக்குநர்கள் பா.ரஞ்சித், கார்த்திக்சுப்புராஜ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட திரை பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினியும் இதற்கு நன்றி தெரிவித்து, ‘’என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. #நீங்கள் இல்லாமல் நான் இல்லை’’என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, #நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ்டேக்கும் டிரண்டாகிறது.