மோடி அரசு ஈகோவை விட வேண்டும்… வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.. ஆம் ஆத்மி

மோடி அரசு ஈகோவை விட வேண்டும்… வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.. ஆம் ஆத்மி

மோடி அரசு ஈகோவை விட்டுவிட்டு விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.

ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மத்திய அரசு இந்த ஈகோவை விட்டுவிட்டு விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கம் உடனடியாக 3 கருப்பு (வேளாண்) சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மோடி அரசாங்கம் விவசாயிகளுடன் இந்த ஈகோ மோதலில் இருப்பதாக தெரிகிறது. இந்திய விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானவை.

மோடி அரசு ஈகோவை விட வேண்டும்… வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.. ஆம் ஆத்மி
பிரதமர் மோடி

கோவிட்-19 ஆரம்ப நாட்களில் டெல்லி அதன் விளைவுகளை கண்டது. சர்வதேச விமான பயணிகள் மற்றும் விமானங்கள் சோதனை செய்யப்படாததால் அதன் விளைவுகளை கடுமையாக எதிர்கொண்டது. ஆகையால் டெல்லியில் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவல் மோசமாக இருந்தது. நமது கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

மோடி அரசு ஈகோவை விட வேண்டும்… வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.. ஆம் ஆத்மி
விமான நிலையத்தில் கோவிட்-19 பரிசோதனை (கோப்புப்படம்)

இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து வர்த்தக மற்றும் பயணி விமானங்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த வேண்டுகோளை முதல்வர் கெஜ்ரிவாலும் விடுத்துள்ளார். ஒரு நாள் தாமதம் ஆனால் கூட நமக்கு பெரும் விலையை கொடுக்க வேண்டியது இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை குறிப்பிட்டு இந்த கருத்தை ராகவ் சதா தெரிவித்தார்.