வேளச்சேரி தொகுதியில் நடிகை ராதிகா போட்டி!

 

வேளச்சேரி தொகுதியில் நடிகை ராதிகா போட்டி!

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேளச்சேரி தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடவுள்ளார்.

வேளச்சேரி தொகுதியில் நடிகை ராதிகா போட்டி!

அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அக்கட்சியிலிருந்து விலகி ஐஜேகே உடன் கூட்டணி அமைத்துள்ளது. அத்துடன் இந்த கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யமும் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நல்லவர்கள் இந்த கூட்டணியில் இணைவார்கள். வெற்றிபெற்ற பிறகு முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிப்போம் என தெரிவித்தார் நடிகர் சரத்குமார்.

இந்நிலையில் சென்னை வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் விவேகாந்தன் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் விவேகாந்தன் இவ்வாறு அறிவித்துள்ளார். வேளச்சேரி தொகுதியில் தற்போது திமுகவைச் சேர்ந்த வாகை சந்திரசேகர் எம்எல்ஏவாக உள்ள நிலையில் அவரே இந்த முறையும் களம்காண்பார் என்று கூறப்படுகிறது.

வேளச்சேரி தொகுதியில் நடிகை ராதிகா போட்டி!

முன்னதாக தூத்துக்குடியில் நடந்த ச.ம.க பொதுக்குழு கூட்டத்தில் கட்சித்
தலைவராக சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ராதிகாவுக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.