சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகனுக்கு கொரோனா!

 

சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகனுக்கு கொரோனா!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 46 லட்சத்து 70ஆயிரத்து 426ஆக அதிகரித்துள்ளது. 6 லட்சத்து 9ஆயிரத்து 557பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகனுக்கு கொரோனா!

இந்நிலையில் சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா உறுதியானது, தற்போது அவர்கள் சென்னை கிங் இன்ஸ்டியூட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.