டெங்குவை சாதாரண காய்ச்சலாக கணக்கிட்டவர் ராதாகிருஷ்ணன்! – தி.மு.க எம்.பி கிளப்பும் சர்ச்சை

 

டெங்குவை சாதாரண காய்ச்சலாக கணக்கிட்டவர் ராதாகிருஷ்ணன்! – தி.மு.க எம்.பி கிளப்பும் சர்ச்சை

தமிழக சுகாதாரத் துறை செயலாளராக முன்பு ராதாகிருஷ்ணன் இருந்தபோது டெங்கு காய்ச்சலையே சாதாரண காய்ச்சலாக கணக்கிட்டார், தற்போது கொரோனாவை என்ன செய்யப் போகிறாரோ என்று தி.மு.க எம்.பி செந்தில்குமார் சந்தேகம் கிளப்பியுள்ளார்.

டெங்குவை சாதாரண காய்ச்சலாக கணக்கிட்டவர் ராதாகிருஷ்ணன்! – தி.மு.க எம்.பி கிளப்பும் சர்ச்சைதமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருந்த ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த துறைக்கு புதியவர் இல்லை. பீலா ராஜேஷ்க்கு முன்பு ராதாகிருஷ்ணன் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக பணியாற்றி வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியபோது தமிழகத்தில் டெங்கு இல்லை என்று கூறியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். பல டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை, சாதாரண காய்ச்சல் என்று அறிவித்ததாக குற்றச்சாட்டு உண்டு.

டெங்குவை சாதாரண காய்ச்சலாக கணக்கிட்டவர் ராதாகிருஷ்ணன்! – தி.மு.க எம்.பி கிளப்பும் சர்ச்சைஇதை தி.மு.க எம்.பி செந்தில்குமார் நினைவுபடுத்தியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “சுகாதாரத் துறை செயலாளர் மாற்றத்துடன் அதிசயம் நிகழும் என்று நம்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள சிக்கல் உண்மைகளை மறைப்பது கொரோனா பாசிட்டிவ் கேஸ் குறைத்து மதிப்பிடுவது. முந்தைய பதவிக்காலத்தில் சுகாதாரத் துறை செயலாளரின் கீழ் தமிழகத்தில் உண்மைக்கு மாறாக கேஸ் குறைத்து மதிப்பிடுவதை நினைவூட்ட விரும்புகிறேன். டெங்கு சாதாரண காய்ச்சலாக கணக்கிடப்பட்டது” என்று கூறியுள்ளார்