கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ராதாகிருஷ்ணன்!

 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ராதாகிருஷ்ணன்!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, 166 மையங்களில் நேற்று தொடங்கியது. நாளொன்றுக்கு ஒரு மையத்தில் 100 பேர் வீதம் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, கோவின் செயலியில் பதிவு செய்திருந்தோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தும் அளவிற்கு பாதுகாப்பானது தான் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை உறுதியளித்திருந்தாலும், பக்க விளைவுகள் இருக்குமோ என்ற அச்சத்தில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவில்லை.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ராதாகிருஷ்ணன்!

இதனால் தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 16,600 பேருக்கு தடுப்பூசி செலுத்த நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 2,500 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முன்களப்பணியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதன் மூலம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.