தமிழக சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்!

 

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்!

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றார்.

சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் வணிக வரித்துறைக்கு அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகரியாக இருந்து வரும் ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் பல்வேறு அதிகார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அதிகார மையத்தில் பீலா ராஜேஷ் தற்போது அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்!

இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சுகாதார துறை செயலராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருந்தனர். ஆனால் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பீலா ராஜேஷ் மட்டும் இந்த விழாவில் கலந்துக்கொள்ளவில்லை.