மூன்றாவது அலை வருமா என்பது தெரியவில்லை – ராதாகிருஷ்ணன் பேட்டி!

 

மூன்றாவது அலை வருமா என்பது தெரியவில்லை – ராதாகிருஷ்ணன் பேட்டி!

மூன்றாவது அலை வரும் என்பது தெரியாவிட்டாலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மூன்றாவது அலை வருமா என்பது தெரியவில்லை – ராதாகிருஷ்ணன் பேட்டி!

நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கொரோனா மூன்றாவது அலை வரும் என்பது தெரியாவிட்டாலும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரகாலம் தீவிரமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். கூடுதல் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அங்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. 25% படுக்கைகள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.