18 மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்கிறது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்!

 

18 மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்கிறது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தினமும் 2,000 என்கிற சராசரி அளவில் இருக்கும் கொரோனா தொற்று சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சற்று குறைகிறது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவஹால் பாதிப்பு அதிகரித்துள்ளது. 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். பணி செய்யும் குடும்பத்தில் பாதிக்கப்படும் நபர்களின் குடும்பத்தையும் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.

18 மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்கிறது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்!

தொடர்ந்து பேசிய அவர் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சவால் இருக்கிறது. நோ ய்தொற்று விகிதம் 1.2 சதவிகிதமாக உள்ளது. கேரளாவில் தொற்று அதிகமாவதால் எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் வரையில் தடுப்பூசி போடுபவர்களின் விகிதம் குறைவாக இருந்ததாகவும் தற்போது 1.97 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.