”ஒரே நாளில் 23.6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”

 

”ஒரே நாளில் 23.6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”

இன்று ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

”ஒரே நாளில் 23.6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “மெகா தடுப்பூசி முகாமில் தற்போது வரை 23.6லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவை, சென்னை, திருப்பூர், தஞ்சை, மதுரை ஆகிய மாவட்டங்களில் 1 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டுமே 1 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கேரள எல்லை ஒட்டிய மாவட்ட மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வமாக முன்வந்துள்ளனர். சென்னையில் ஏற்கனவே 60 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தியதில் சென்னை தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

மக்களின் ஆதரவு இருப்பதால் தொடர்ந்து தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். சமூக வலைதளங்களில் வரும் தடுப்பூசி தொடர்பான தவறான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.. கிராமம்,வார்டு,தெரு,சந்து பொந்து எல்லாம் மையங்கள் அமைத்து சாத்தியப்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சகம். அதனாலேயே இவ்வளவு தடுப்பூசி செலுத்துவது சாத்தியமாகியுள்ளது” என தெரிவித்தார்.