40% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை: ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்புக்கான மிக முக்கிய ஆயுதம் மாஸ்க் மட்டுமே என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போது கொரோனா தடுப்புக்கான மிக முக்கியமான ஆயுதம் மாஸ்க் மட்டுமே. ஆனால் இங்கு 40% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. சிலர் முகக்கவசத்தை அலட்சியமாகவும் தவறாகவும் அணிகின்றனர்.

பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிவதால் நமக்கும் மற்றவர்களுக்கும் நோய் வருவதை தடுக்கலாம். கொரோனா பரவலில் கோவை, சேலம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் சவாலானதாக உள்ளது” என தெரிவித்தார்.