5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்

 

5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “சுகாதாரப் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்புள்ளவர்கள் ஆர்வமாக ஊசி போட்டுக் கொள்வது பாராட்டத்தக்கது. சராசரியாக தினமும் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 1000 தெருக்களில் இருந்து தினமும் 5 அல்லது 6 பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் பாதிப்பு குறையவில்லை.

5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்

திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள், பேருந்து, ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். கொரோனா போய்விட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். அறிகுறி இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். தடுப்பூசி காலாவதியாகிவிட்டது என்று தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். தமிழகத்துக்கு 26 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.