கொரோனா பரிசோதனை செய்பவர்களெல்லாம் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்! மாற்றிமாற்றி பேசும் அரசு!

 

கொரோனா பரிசோதனை செய்பவர்களெல்லாம் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்! மாற்றிமாற்றி பேசும் அரசு!

சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திண்டாடி வருகிறது என்பதை அதன் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் சென்னையில் வைரஸ் தொற்று குறைந்தபாடில்லை. இதற்கிடையில் சென்னை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்பவர்கள் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு மக்களை பீதிக்குள்ளாகியுள்ளது.

கொரோனா பரிசோதனை செய்பவர்களெல்லாம் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்! மாற்றிமாற்றி பேசும் அரசு!

இந்நிலையில் சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோர் “நெகட்டிவ்” என முடிவுகள் வந்த பின்பு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே 14, நாட்கள் தனிமைப் படுத்தப் வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பரிசோதனை மேற்கொள்வோர் அனைவரும் தனிமைப் படுத்த வேண்டும் என்று நேற்று மாநகராட்சி அறிவித்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார். இப்படி காலையில் ஒரு அறிவிப்பும் மாலையில் ஒரு அறிவிப்பும் வெளியாவது மக்களை குழப்புகிறது.