“என்ன பண்ணாலும் குழந்தை பொறக்கலே ,அதான் இப்படி பண்ணோம் ..”-குழந்தைக்காக நடந்த மெகா மோசடி.

 

“என்ன பண்ணாலும் குழந்தை பொறக்கலே ,அதான் இப்படி பண்ணோம் ..”-குழந்தைக்காக நடந்த மெகா மோசடி.

பல குழந்தை இல்லாத தம்பதிகள் , குழந்தைகளை சட்டவிரோதமாக பல ஏஜெண்ட்களிடம் பணம் கொடுத்து வாங்கியதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்

“என்ன பண்ணாலும் குழந்தை பொறக்கலே ,அதான் இப்படி பண்ணோம் ..”-குழந்தைக்காக நடந்த மெகா மோசடி.

மும்பையில் ஹீனா கான் மற்றும் நிஷா அஹைர் ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட ஒரு கூட்டம் குழந்தைகளை கடத்தி ,குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது .அதன் பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு இந்த குழந்தை கடத்தல் பற்றி துப்பு துலக்கப்பட்டது .அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது .
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு குழந்தை கடத்தல் கூட்டம் பெண் குழந்தைகளை ரூ .60,000 க்கும் ஆண் குழந்தைகளை ரூ .1.50 லட்சத்துக்கும் விற்றனர்.இந்த கடத்தல் கூட்டம் பாந்த்ரா கிழக்கின் தியானேஷ்வர் நகரில் தங்கியிருந்தது .இவர்களிடம் மும்பையின் தேசாய் மருத்துவமனையில் பிரசவித்த சில பெண்கள் தங்களின் குழந்தைகளை வறுமையால் விற்றுள்ளனர் .பிறகு அவர்கள் அந்த குழந்தைகளை , குழந்தை இல்லாமல் இருக்கும் பல செல்வந்தர்களுக்கு முறையற்ற முறையில் சட்டவிரோதமாக விற்று பணம் சம்பாதித்துள்ளனர் .
மேலும் இவர்களிடம் குழந்தைகளை விற்ற பல பெண்களை பற்றியும் போலிஸுக்கு தகவல் கிடைத்துள்ளது .அவர்களிடம் குழந்தைகளை வாங்கிய தம்பதிகளை பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .இந்த கூட்டத்தினர் பல வருடங்களாக இந்த குழந்தை கடத்தலை செய்து கோடிக்கணக்கில் பணம் ஈட்டியதை கண்டுபிடித்துள்ளார்கள் .மேலும் இவர்களின் நெட்ஒர்க்கில் பல மருத்துவனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்துள்ளதையும் போலீசார் கண்டறிந்துள்ளார்கள் .அந்த ஹாஸ்ப்பிட்டல் ஊழியர்கள் மூலமாக பல ஹாஸ்ப்பிட்டல்களில் இருந்து குழந்தைகள் பெற்றோருக்கு தெரியாமல் விற்க்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேக படுகின்றனர் .போலீசார் இந்த கூட்டத்தை சேர்ந்த பலரை வலை வீசி தேடி வருகிரார்கள் .

“என்ன பண்ணாலும் குழந்தை பொறக்கலே ,அதான் இப்படி பண்ணோம் ..”-குழந்தைக்காக நடந்த மெகா மோசடி.