`சென்ட்ரல் மினிஸ்டர் பதவி; ரவீந்திர நாத் குமாருக்கு மீண்டும் `கல்தா’!’- ஓபிஎஸ் ஆசைக்கு `செக்’ வைத்த கொங்கு அமைச்சர்கள்

 

`சென்ட்ரல் மினிஸ்டர் பதவி; ரவீந்திர நாத் குமாருக்கு மீண்டும் `கல்தா’!’- ஓபிஎஸ் ஆசைக்கு `செக்’ வைத்த கொங்கு அமைச்சர்கள்

இந்த தடவையாவது மகனை மத்திய அமைச்சராக்கிவிட வேண்டும் என்று நினைத்த ஓபிஎஸ்ஸின் முயற்சிக்கு செக் வைத்துள்ளனர் கொங்கு மண்டல அமைச்சர்கள். இதனால் ஏக கடுப்பில் இருக்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு.

ஜெயலலிதாவின் காலம் வேற… எடப்பாடி பழனிசாமியின் காலம் வேற… அந்த அளவுக்கு ஆட்சியிலும், கட்சியிலும் கொடிகட்டி பறக்கிறார்கள் சில அமைச்சர்கள். அவர்களில் கொங்கு மண்டல அமைச்சர்களின் ஆதிக்கரித்து காணப்படுகிறதாம். ஜெயலலிதா இருந்த வரை அடக்கி வாசித்த இந்த மண்டல அமைச்சர்கள், தற்போது, நிழல் முதல்வராக மாறிவிட்டார்களாம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ஆட்சிக் கனவை தகர்த்தது இந்த கொங்கு மண்டலம்தான். இந்த கொங்கு மண்டலத்தில் உள்ள கரூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கவுண்டர் சமூகத்தினர் எண்ணிக்கை அதிகம். இந்த மாவட்டங்களில் மொத்தமுள்ள 47 சட்டமன்றத் தொகுதிகளில் 41 தொகுகளை அதிமுக கைப்பற்றியது. 47 எம்.எல்.ஏ-க்களில் 9 அமைச்சர்கள், 9 எம்.பிக்களாக இருக்கின்றனர். இதில், முதல்வர் பழனிசாமி, 27 எம்.எல்.ஏ-க்கள் உட்பட 5 அமைச்சர்கள் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தற்போது பவர் சென்டராக இருக்கின்றனர்.

`சென்ட்ரல் மினிஸ்டர் பதவி; ரவீந்திர நாத் குமாருக்கு மீண்டும் `கல்தா’!’- ஓபிஎஸ் ஆசைக்கு `செக்’ வைத்த கொங்கு அமைச்சர்கள்

‘இப்ப நான் சி.எம். மாதிரி. நான் சொல்வதைத்தான் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். என்னை மீறி எந்த வேலையையும் அவர் செய்வது கிடையாது. என்னைத் தாண்டி இந்த ஆட்சியில் எதுவும் நடக்காது. கொங்கு மண்டலத்தில் மட்டும் அல்ல, இனி தமிழ்நாட்டில் தொடர்ந்து நம்ம ஆட்சிதான்” என்று எஸ்.பி.வேலுமணி தனது நண்பர்களிடம் பேசியதாக கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட பலமான கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மற்ற தொகுதிகளில் அதிமுக மட்டுமின்றி கூட்டணி கட்சி படுதோல்வியை சந்தித்தது. தேர்தலில் அதிமுகவினர் தங்களுக்கு பணி செய்யவில்லை என்ற குற்றசாாட்டை முன்வைத்தது கூட்டணி கட்சிகள். இதனால், அதிமுக மீது அவர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். சசிகலாவை கட்சியில் இருந்து ஓரம் கட்டிய ஓபிஎஸ், எடப்பாடியுடன் இணைந்து செயல்படுகிறார். அவரை நம்பி வந்தவர்களை கைவிட்டதாக ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் ஆதரவாளர்கள். அதோடு, “தனது மகனை எம்பியாக்கி விட்டார். அம்மா இருந்தால் அவரது மகனுக்கு சீட் கிடைத்திருக்குமா?. எல்லாம் நேரம்” என்று கொந்தளித்திருக்கின்றனர்.

`சென்ட்ரல் மினிஸ்டர் பதவி; ரவீந்திர நாத் குமாருக்கு மீண்டும் `கல்தா’!’- ஓபிஎஸ் ஆசைக்கு `செக்’ வைத்த கொங்கு அமைச்சர்கள்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. தமிழகத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்பி, அதாவது தனது மகன் வெற்றி பெற்றதால் அவரை மத்திய அமைச்சராக்க ஓபிஎஸ் பகீரத முயற்சி மேற்கொண்டார். மோடியுடன் நெருக்கமாக இருந்த ஓபிஎஸ், மகனுக்கு அமைச்சர் பதவி வாங்கியே தீர வேண்டும் என்று முயன்றார். ஆனால், எடப்பாடி, கொங்கு மண்டல அமைச்சர்கள் தடுத்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதனை மறுத்தது அதிமுக தலைமை.

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அதிமுக தனது ஆதரவை தெரிவித்தது. அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தவர் எம்.பியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆவார். இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே ஆளும் அதிமுக மீது இஸ்லாமியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலில் ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தன.

`சென்ட்ரல் மினிஸ்டர் பதவி; ரவீந்திர நாத் குமாருக்கு மீண்டும் `கல்தா’!’- ஓபிஎஸ் ஆசைக்கு `செக்’ வைத்த கொங்கு அமைச்சர்கள்

இதனிடையே, மத்திய அமைச்சரவையை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்த சர்ந்தர்ப்பத்தை பயன்படுத்தி மகனை மத்திய அமைச்சராக்க ஓபிஎஸ் முயற்சி மேற்கொண்டார். இது கொங்கு மண்டல அமைச்சர்கள் 4 பேர் சேர்ந்து முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளனர். அப்போது, தன் மகனுக்கு அமைச்சர் பதவியை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் நாம் படுதோல்வியை சந்தித்தோம். ஓபிஎஸ் அவரது மகனை மட்டும் வெற்றி பெற வைத்துவிட்டார். வேறு எந்த தொகுதிகளிலும் ஓபிஎஸ் சரியாக வேலை செய்யவில்லை. தனது மகளின் தொகுதி தேனியே தஞ்சம் என்று கிடந்தார். கட்சியை பற்றி அவருக்கு கவலையில்லை. இப்படிப்போனால் கட்சியை அழித்துவிடுவார். ஓபிஎஸ் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என்று கொந்தளித்துள்ளனர். இதனை மெளனமாக கேட்டறிந்த எடப்பாடி, உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்று கூறி அனுப்பிவிட்டார். பாஜகவில் தனக்கு நெருங்கியவர்களிடம் முறையிட்டுள்ளார். தற்போது, விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் ரவீந்திரநாத் குமாருக்கு வாய்ப்பு அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது ஓபிஎஸ் காதுக்கு சென்றுள்ளது. இதற்கு கொங்கு மண்டலத்தை சேர்ந்த அந்த அமைச்சர்கள்தான் என்று கொந்தளிப்பில் இருக்கிறதாம் ஓபிஎஸ், ரவீந்திரநாத் ஆதரவாளர்கள்.