முதியோர், இணை நோய் உள்ளோர் மாதிரிக்கு கொரோனா முடிவுகளை விரைந்து அறிவியுங்கள்!

முதியோர், இணை நோய் உள்ளோர் மாதிரிக்கு கொரோனா முடிவுகளை விரைந்து அறிவியுங்கள்!

7 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் புதிய தளர்வுகள் அறிவிப்பது பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதியோர், இணை நோய் உள்ளோர் மாதிரிக்கு கொரோனா முடிவுகளை விரைந்து அறிவியுங்கள்!

அப்போது அதிகாரிகள் மத்தியில் பேசிய அவர், “கொரோனாவிலிருந்து அதிகம் பேர் குணமடைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 80 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வந்துள்ளோம். தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை சிறப்பாக அளிக்கப்படுகிறதா என தமிழக அரசு கண்காணிக்கிறது. கொரோனா சிகிச்சைக்கான முக்கிய மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது” என்றார்.

முதியோர், இணை நோய் உள்ளோர் மாதிரிக்கு கொரோனா முடிவுகளை விரைந்து அறிவியுங்கள்!

தொடர்ந்து பேசிய அவர், ” ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் விலையில்லா முக கவசங்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகித்து வருகிறோம். ரூ.31,464 கோடி மதிப்புள்ள முதலீடுகள் தமிழகத்திற்குள் வந்துள்ளன. வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தமிழகம் முதலிடம்” வகித்து வருவதாகவும் முதல்வர் பழனிசாமி பெருமைப்பட கூறினார். மேலும் முதியோர், இணை நோய் உள்ளோர் மாதிரிக்கு முன்னுரிமை தந்து கொரோனா முடிவுகளை விரைந்து அறிவியுங்கள் என ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.