அமெரிக்காவில் டிக்டாக்குக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு! – வெள்ளை மாளிகை அதிகாரி தகவல்

 

அமெரிக்காவில் டிக்டாக்குக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு! – வெள்ளை மாளிகை அதிகாரி தகவல்

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பது பற்றி சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஹலோ, டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக டிக்டாக் செயலி காரணமாக சமூக ஊடகங்களில் தவறான தகவல், பாலியல் ரீதியான செயல்கள் பெருகுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசு கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி-க்கள் ஜனாதிபதி டிரம்புக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அமெரிக்காவில் டிக்டாக்குக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு! – வெள்ளை மாளிகை அதிகாரி தகவல்சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது போல அமெரிக்காவும் தடை விதிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியிருந்தார். ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த கடிதத்தில் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அமெரிக்காவில் டிக்டாக்குக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு! – வெள்ளை மாளிகை அதிகாரி தகவல்
இந்த நிலையில் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்க அரசு முடிவு எடுத்துவிட்டதா என்று கேட்டனர். அதற்கு அவர், “அமெரிக்காவில் சீன செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக சில வாரங்களில் முடிவெடுக்கப்படும். முடிவெடுக்கும் விவகாரங்களை மாதக் கணக்கில் தள்ளிப்போட மாட்டோம். அதே நேரத்தில் இதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சீன செயலிகள் குறிப்பாக டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதா என்று ஆய்வுகள் நடந்து வருகின்றன” என்றார்.