• April
    06
    Monday

Main Area

Main



‘குயின்’, ‘தலைவி’ தடை விதிக்க முடியாது... ஜெ. தீபா மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

‘குயின்’, ‘தலைவி’
‘குயின்’, ‘தலைவி’

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாறை திரைப்படமாக எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர்  ஏ.எல். விஜய் நடிகை கங்கனா ரனாவத்தை  வைத்து தலைவி என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார்.

ttn

 

அதே போல் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றை தற்போது வெப் சீரிஸாக இயக்கியுள்ளார்.  இந்த வெப் சீரிஸுக்கு 'குயின்' என்று  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பப்பட்ட இந்த வெப் சீரிஸில்  ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ttn

இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இந்தப் படங்கள் வெளியிடுவதற்கு முன்பு தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என  உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  அதில், தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடர் ஆகிய இந்த இரண்டிற்கும் தடைவிதிக்க வேண்டும். மேலும் இதன் திரைக்கதைகள் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்குக் குறையில்லாமல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.

ttn

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் இணையதள தொடர் விரைவில் வெளியாகவுள்ளது என்று வாதிடப்பட்டது. அதற்கு கௌதம் தரப்பிலோ, எங்களுக்கு இது தொடர்பாக எந்த ஆவணங்களும்  வழங்கப்படவில்லை என்றும் சொல்லப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, வழக்கு ஆவணங்களை கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உடனடியாக கொடுக்க தீபா தரப்புக்கும், பதில் மனுத்தாக்கல் செய்ய கௌதம் மேனன் தரப்புக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ttn


இந்நிலையில் இந்த வழக்கு  மீதான  விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது தீபா தரப்பில் தலைவி,  குயின்  இரண்டுக்கும் தடைவிதிக்க வேண்டும்  என்று கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்போ,  தீபா கதாபாத்திரம்  குயின் வெப் சீரிஸில் இடம்பெறவில்லை என்றது. அதேபோல் தலைவி படத்தின் தரப்போ, இதுவரை வெளியான புத்தகங்கள் அடிப்படையிலேயே படம் எடுக்கப்பட்டு வருகிறது என்றது. இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி, தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து படத்திற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் படம் கற்பனையானது என அறிவிப்பு  வெளியிட இருதரப்புக்கும் அறிவுறுத்தியுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.