திரையரங்குகள் மூடப்பட்டதால் ரூ.226 கோடி நஷ்டத்தை சந்தித்த பி.வி.ஆர்.

 

திரையரங்குகள் மூடப்பட்டதால் ரூ.226 கோடி நஷ்டத்தை சந்தித்த பி.வி.ஆர்.

2020 ஜூன் காலாண்டில் பி.வி.ஆர். நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.225.73 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி சங்கிலிதொடர் மல்டிபிளக்ஸ் திரையரங்களை நடத்தி வரும் பி.வி.ஆர். நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. 2020 ஜூன் காலாண்டில் பி.வி.ஆர். நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.225.73 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக சினிமா கண்காட்சி வர்த்தகம் மூடப்பட்டதே இதற்கு காரணம்.

திரையரங்குகள் மூடப்பட்டதால் ரூ.226 கோடி நஷ்டத்தை சந்தித்த பி.வி.ஆர்.
பி.வி.ஆர்.

2020 ஜூன் காலாண்டில் பி.வி.ஆர். நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.12.70 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.880.79 கோடியாக உயர்ந்து இருந்தது. செயல்பாட்டு வாயிலான வருவாய் குறைந்துள்ளபோதிலும், கடந்த காலாண்டில் பி.வி.ஆர். நிறுவனத்தின் இதர வருவாய் ரூ.42.65 கோடியாக உயர்ந்துள்ளது.

திரையரங்குகள் மூடப்பட்டதால் ரூ.226 கோடி நஷ்டத்தை சந்தித்த பி.வி.ஆர்.
பி.வி.ஆர்.

2020 ஜூன் காலாண்டில் பி.வி.ஆர். நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.859 கோடியிலிருந்து ரூ.397 கோடியாக குறைந்துள்ளது. பி.வி.ஆர். நிறுவனம் நிதி நிலை முடிவுகள் குறித்து கூறுகையில், நாடு முழுவதும் கோவிட்-19 நிலைமை குழுவின் செயல்பாடுகளை மோசமாக பாதித்தது. இதன் விளைவாக கடந்த ஜூன் காலாண்டில் கிட்டத்தட்ட செயல்பாட்டு வருவாய் இல்லை. திரையரங்குகளை திறப்பது தொடர்பான அரசாங்க உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளது.