முக்கியமான போட்டியிலிருந்து பி.வி சிந்து விலகல் – காரணம் சொல்கிறார் அப்பா ரமணா

முக்கியமான போட்டியிலிருந்து பி.வி சிந்து விலகல்  – காரணம் சொல்கிறார் அப்பா ரமணா

இந்திய பேட்மிண்டன் விளையாட்டின் முகம் பி.வி சிந்து. ஒலிம்பிக், காமன்வெத், ஆசிய போட்டிகள் என ஏராளமான பதங்கங்களை வென்று, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர் பி.வி. சிந்து.

கொரோனா அச்சத்தால் உலகின் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் கைவிட பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஆசிய அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற வில்லை.

முக்கியமான போட்டியிலிருந்து பி.வி சிந்து விலகல்  – காரணம் சொல்கிறார் அப்பா ரமணா

ஐபிஎல் போட்டிகளே ஒத்தி வைக்கப்பட்டு, இம்மாதம் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகிறது.

பேட்மிண்டனுக்கான முக்கியான போட்டித்தொடராகப் பார்க்கப்படுவது தாமஸ் – உபேர் கோப்பை. இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு பாங்காங்கில் இந்தத் தொடர் நடந்தது.

முக்கியமான போட்டியிலிருந்து பி.வி சிந்து விலகல்  – காரணம் சொல்கிறார் அப்பா ரமணா

இந்த ஆண்டின் ஆகஸ்ட்டில் நடைபெற வேண்டிய தாமஸ் – உபேர் கோப்பை போட்டிகள், கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது டென்மார்க்கில் அக்டோபர் 3 –ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டித் தொடரிலிருந்து விலகியிருக்கிறார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து. இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

முக்கியமான போட்டியிலிருந்து பி.வி சிந்து விலகல்  – காரணம் சொல்கிறார் அப்பா ரமணா

ஏன் சிந்து விலகினார் என்பதற்கு அவரின் தந்தை ரமணா, ‘அக்டோபர் முதல் வாரத்தில் எங்களுக்கு முக்கியமான சில வேலைகள் இருக்கின்றன. கொரோனா எல்லாம் சிந்துவுக்கு இரண்டாம் பட்சம்தான்’ என்று தெரிவித்திருக்கிறார். சீனா உள்ளிட்ட சில நாடுகள் இந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.