பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

 

பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பி.வி. சிந்துவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Image

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் சீனாவின் ஹி பிங்ஜியோவை வீழ்த்தியதையடுத்து இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்றார். 21-13, 21-15 என்ற செட் கணக்கில் போட்டியை வென்று அபார வெற்றிப்பெற்றுள்ளார். இதன்மூலம் அடுத்தடுத்த ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை எனும் பெருமையை பி.வி.சிந்து பெற்றார். அதாவது பி.வி. சிந்து 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் வெண்கலம் வென்றார். 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தையும், 2017 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கத்தையும் வென்றார். அடுத்ததாக 2018 ஆம் ஆண்டும் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கத்தை வென்றார். 2019 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பி.வி.சிந்து தற்போது ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்டோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மகளின் வெற்றிக்குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பி.வி.சிந்துவின் தந்தை ரமணா, “ஒலிம்பிக்ஸில் வரலாறு படைத்துவிட்டார் பி.வி.சிந்து. மிகுந்த அழுத்தத்துக்கு இடையே விளையாடிய போதும் அனைவரது ஆசிர்வாதத்தாலும் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்” எனக் கூறியுள்ளார்.