வீட்டு வாடகை பிரச்னையில் தீக்குளித்த சம்பவம்: புழல் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சீனிவாசனை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் குழல் அடுத்த விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் ராஜேந்திரன். இவரது வீட்டில் சீனிவாசன் என்பவர் கடந்த ஆறு மாத காலமாக வாடகைக்கு வசித்து வந்துள்ளார் பெயிண்டர் வேலை செய்யும் சீனிவாசன் ஊரடங்கு காரணமாக தனது வாழ்வாதாரத்தை இழந்து மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து வாடகை கொடுக்காமல் இருந்த சீனிவாசனை வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது இருப்பினும் இதற்கு சீனிவாசன் மறுப்பு தெரிவித்ததால் ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் கடந்த 29ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் நேற்று சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது பென் சாம் சீனிவாசனின் மனைவி மற்றும் மகள் முன்னால் அவரை தாக்கியுள்ளார். இதையடுத்து அவமானத்தை தாங்கமுடியாத சீனிவாசன் நேற்று மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சீனிவாசனை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

85 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வரும் சீனிவாசன் தன்னை காவல் ஆய்வாளர் பென் சாம் தாக்கி அவமானப்படுத்தியதாகவும், அதனால் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் வீட்டு வாடகை பிரச்னையில் சீனிவாசன் தீக்குளித்த சம்பவத்தில் சென்னை புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆய்வாளர் தாக்கியதாக தீக்குளித்த சீனிவாசன் வாக்குமூலம் அளித்த நிலையில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular

#BREAKING: “ரூ.42 ஆயிரத்தை எட்டியது தங்க விலை”.. சவரனுக்கு ரூ.792 உயர்ந்து புதிய உச்சம்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக...

இந்தியாவிலேயே முதன் முறையாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற அம்மா கோவிட்19 வீட்டு பராமரிப்பு திட்டம்! – எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்

கொரோனா நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு என்ற சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். தமிழக அரசின் கடும் நடவடிக்கை காரணமாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை 8.52 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய...

மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் மேலும் 95...