புதுக்கோட்டை தென்னலூர் ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 5 பேர் காயம்

 

புதுக்கோட்டை தென்னலூர் ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 5 பேர் காயம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் வந்த 750-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அதேபோல், போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

போட்டியை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, இளைஞர்கள் திமிலைப் பிடித்து அடக்க முயன்றனர். சில காளைகள் வீரர்கள் தொட முடியாத அளவிற்கு அச்சுறுத்தி சென்றன.

புதுக்கோட்டை தென்னலூர் ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 5 பேர் காயம்

இறுதியில் காளையை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், பீரோ, கட்டில் மற்றும் ரொக்கப்பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியை புதுக்கோட்டை மற்றும அண்டை மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.

போட்டியின்போது காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.