குத்தாட்டம் போட்ட ஸ்டாலின், ஈபிஎஸ் : இணையத்தை கலக்கும் அனிமேஷன்

 

குத்தாட்டம் போட்ட ஸ்டாலின், ஈபிஎஸ் : இணையத்தை கலக்கும் அனிமேஷன்

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் நேற்று அதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் கிட்டத்தட்ட பல தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகிய நிலையில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் முன்னிலை வகித்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

குத்தாட்டம் போட்ட ஸ்டாலின், ஈபிஎஸ் : இணையத்தை கலக்கும் அனிமேஷன்

இந்த சூழலில் நேற்று காலை முதலே தொலைக்காட்சிகள் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை காண முடிவுகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன. அந்த வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சட்டப்பேரவை தேர்தல் சிறப்பு நேரலையை நேற்று காலை முதலே தொடங்கியது. தமிழகத்தில் நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை உடனுக்குடன் வழங்குவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் சாமானியரின் தீர்ப்பு என்ற பெயரில் அந்த ஊடகம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தது.

https://twitter.com/vaangasirikalam/status/1388748007655448577

இதில் ரசிக்கக்கூடியது என்னவென்றால் புதிய தலைமுறை ஊடகத்தில் ஒளிபரப்பான மோடி, ராகுல், எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலினின் அனிமேஷன் கேரக்டர்கள் தான்.

குத்தாட்டம் போட்ட ஸ்டாலின், ஈபிஎஸ் : இணையத்தை கலக்கும் அனிமேஷன்

வெற்றி பெற்றுவிட்டால் உற்சாகமாக நடனமாடி கிரிக்கெட் மட்டையால் சிக்ஸர் அடிப்பது போல அனிமேஷன் கேரக்டர்கள் உருவாக்கப்பட்ட நிலையில், தோல்வி முகம் என்றால் துவண்டுபோய் சோகமாக நிற்பது போலவும் கேரக்டர்கள் அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தன. இது இளைஞர்கள் பலரைக் கவர்ந்த நிலையில் இதுகுறித்து இணைய தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.