“நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்” – ஓபிஎஸ் கோரிக்கை!!

 

“நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்” – ஓபிஎஸ் கோரிக்கை!!

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்” – ஓபிஎஸ் கோரிக்கை!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “ நீட் தேர்வு ரத்து செய்ய முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தாலும் , திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தான் திமுக தலைவர்களால் மேடைக்கு மேடை முழங்கப்பட்டது . அதை நம்பித்தான் திமுகவிற்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக என்ன வழியை பின்பற்றியதோ, அதே வழியை தான் திமுகவின் பின்பற்றி வருகிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த வாதத்தை முன் வைத்தால் இதற்காக குழு அமைத்து அதன் பிறகு தான் சட்ட முடிவினை முன்வடிவு நிறைவேற்றம் என்று திமுக கூறப்படும். ஆனால் அந்தக் குழுவிற்கு எந்த அங்கீகாரமும் கிடையாது. இது அரைத்த மாவையே அரைப்பது சமம். இது வெறும் சம்பிரதாயத்திற்காக இந்த முடிவு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றே மக்கள் கருதுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

“நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்” – ஓபிஎஸ் கோரிக்கை!!

தொடர்ந்து அந்த அறிக்கையில், ” அதிமுக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சி காலத்தின் போது சிறிது காலமும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது 13 மாத காலம் தான் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. திமுகவை போல் 17 ஆண்டுகள் மத்திய அரசின் அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகித்து இருந்தால் இந்த நேரத்திற்கு கல்வி மாநிலப் பட்டியலில் மீண்டும் வந்து இருக்கும் என்பதை இங்கே அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்ட விழைகிறேன். தற்போது திமுக கூட்டணிக்கு 37 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர் . அடுத்த ஆண்டு இந்திய குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வர உள்ளன. இந்த சூழ்நிலையில் மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து நீட் தேர்வு ரத்து என்று அறிவிப்பினை செய்யவும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.