’மாஸ்க் போடுங்க ரொனால்டோ…’ வைரல் வீடியோ

 

’மாஸ்க் போடுங்க ரொனால்டோ…’ வைரல் வீடியோ

கொரோனாவின் தாக்கத்தால் உலகமே பீதியடைந்து வருகிறது. கொரோனா தொற்று 3 கோடியை நெருங்கி வருகிறது. அதேபோல கொரோனா நோய் பாதித்து சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தொடவிருக்கிறது.

கடந்த பத்து மாதங்களுக்காக உலகமே கொரோனாவால் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றனர்.

’மாஸ்க் போடுங்க ரொனால்டோ…’ வைரல் வீடியோ

கொரோனா நோய்த் தொற்றால் ரசிகர்கள் மைதானத்திற்கு வர முடியாது என்பதாலும், ஆடுபவர்களுக்கும் நோய்த் தொற்று ஆகிவிடும் என்பதாலும் பல விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால், பொதுஇடங்களில் செல்லும்போது தனிமனித இடைவெளி முக்கியம் என வலியுறுத்தப்படுகிறது. அதேபோல முகக்கவசம் அணிவதும் கட்டாயம் என்பதாகி விட்டது. தமிழ்நாடு அரசு, மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் சட்டம் இயற்றியுள்ளது.

இந்நிலையில் பிரபல கால்பந்து வீரர் மாஸ்க் இல்லாமல் உட்கார்ந்து போட்டியை ரசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

’மாஸ்க் போடுங்க ரொனால்டோ...’ வைரல் வீடியோ

போர்ச்சுக்கல் நாட்டின் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் ஒரு மைதானத்தில் அமர்ந்து நிதானமாக அங்கு நடக்கும் போட்டியைப் பார்த்து ரசிக்கிறார். ஆனால், மாஸ்க் அணிய வில்லை.

அப்போது ஒரு அதிகாரி வந்து, ரொனால்டோவிடம் மாஸ்க் அணியுமாறு கூறுகிறார். முதலில் அவர் சொல்கிறார் என்பது புரியாத மாதிரி ரொனால்டோ வின் முகம் மாறுகிறது. பிறகு சட்டென்று அருகில் வைத்திருந்த மாஸ்க்கை எடுத்து அணிந்துகொள்கிறார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு முக்கியமான பிரபலம் இப்படி அலட்சியமாக இருப்பது சரியா என்று நெட்டிசன்கள் கேள்விகளாகக் கேட்டு வருகின்றனர்.