பூரியில் 12 ஆண்டுகள் தேரோட்டம் நடத்த முடியாது… உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட மத்திய அரசு

 

பூரியில் 12 ஆண்டுகள் தேரோட்டம் நடத்த முடியாது… உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட மத்திய அரசு

ஒரு வருடம் தேரோட்டத்தை ரத்து செய்தால் அடுத்த 12 ஆண்டுகளுக்கு தேரோட்டம் நடத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம் நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையிட்டுள்ளது.

பூரியில் 12 ஆண்டுகள் தேரோட்டம் நடத்த முடியாது… உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட மத்திய அரசுஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. லட்சக் கணக்கான தொண்டர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர். பாலபத்ரா, ஜெகன்நாதர், சுபத்ரா ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும் 2 கி.மீ தொலைவில் உள்ள மவுசிமா கோவிலுக்கு சென்று ஓய்வு எடுப்பார்கள். 9வது நாள் அங்கிருந்து புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். இந்த ஆண்டின் தேரோட்டம் நாளை (23ம் தேதி) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தேரோட்டத்தை அனுமதித்தால் லட்சக் கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள், கொரோனா சமூக இடைவெளி காணாமல் போகும், இதனால் கொரோனா வேகமாக பரவும் என்று கூறி பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.

பூரியில் 12 ஆண்டுகள் தேரோட்டம் நடத்த முடியாது… உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட மத்திய அரசுஇதை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், இது மக்களின் நம்பிக்கையோடு தொடர்புடையது. பூரி ஜெகன்நாதர் கோவிலை விட்டு நாளை வெளிவராவிட்டால், அடுத்த 12 ஆண்டுகளுக்கு வரமாட்டார். இது மரபாக இருந்து வருகிறது. எனவே, பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மாநில அரசு செய்யும், அதற்கான ஊரடங்கு உத்தரவையும் பிறப்பிக்கும். எனவே, தேரோட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தி முந்தைய உத்தரவில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.