‘குமரியை நெருங்கும் புரெவி புயல்’: எப்போது கரையைக் கடக்கும்?

 

‘குமரியை நெருங்கும் புரெவி புயல்’: எப்போது கரையைக் கடக்கும்?

தென் வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், நாளை காலை புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் டிச.4ம் தேதி வரை தென் தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

‘குமரியை நெருங்கும் புரெவி புயல்’: எப்போது கரையைக் கடக்கும்?

நிவர் புயலின் தாக்கம் இன்னும் தணியாத நிலையில், தற்போது மீண்டும் உருவாகி இருக்கும் இந்த புயல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டிச.4ம் தேதி அதிகாலை கன்னியாகுமரி – பாம்பன் இடையே புயல் கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘குமரியை நெருங்கும் புரெவி புயல்’: எப்போது கரையைக் கடக்கும்?

மேலும், டிச.2ம் தேதியன்று இந்த புயல் திரிகோணமலையை கடக்கும் என்றும் புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கும் வரும் என்றும் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.