புரெவி புயல் எதிரொலி- பாம்பனில் சூறைக்காற்றுடன் கனமழை

 

புரெவி புயல் எதிரொலி- பாம்பனில் சூறைக்காற்றுடன் கனமழை

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் புரெவி புயல் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் எதிரொலி- பாம்பனில் சூறைக்காற்றுடன் கனமழை

இதனிடையே புயல் பாம்பனை நெருங்கி வருவதால் அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகின்றது. கடல் காற்றின் சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. இதனால் கடல் அலைகள் சுமார் 15 அடி தூரத்திற்கு எழும்புவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும், கடல் கொந்தளிப்பு காரணமாக பாம்பன் வடகடல் பகுதியில் கரையோரங்களில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தும் கடல் அலையால் அரிக்கப்பட்டு, எந்த நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, ராமேஸ்வரத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

புரெவி புயல் எதிரொலி- பாம்பனில் சூறைக்காற்றுடன் கனமழை

மேலும், கனமழை பெய்து வருவதால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்கள் வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.