‘ஒரு தடுப்பூசி ரூ.295’.. 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல்!

‘ஒரு தடுப்பூசி ரூ.295’.. 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல்!

பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

‘ஒரு தடுப்பூசி ரூ.295’.. 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல்!

கொரோனா வைரஸுக்கு எதிரான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. மூன்று கட்ட பரிசோதனையிலும் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாததால், மக்களுக்கு வரும் 16ம் தேதி முதல் செலுத்தப்பட உள்ளது. அதற்காக, சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.10கோடி கோவிஷீல்டு மருந்துகளை கொள்முதல் செய்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது. அந்த மாநிலங்களில் இருக்கும் மருந்து கிடங்கில் அவை சேகரிக்கப்பட்டு மாவட்டம் வாரியாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

‘ஒரு தடுப்பூசி ரூ.295’.. 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல்!

இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தலா ரூ.295 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 16.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இலவசமாக அளிக்க பாரத் பயோடெக் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் 35.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை அந்த விலைக்கு வாங்கவிருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அரசின் இந்த தீவிர நடவடிக்கைகள் மூலம், பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.