வலுப்பெறும் புரெவி புயல் : எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வலுப்பெறும் புரெவி புயல் : எந்தெந்த  மாவட்டங்களில்  கனமழை பெய்யும்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது .

வலுப்பெறும் புரெவி புயல் : எந்தெந்த  மாவட்டங்களில்  கனமழை பெய்யும்!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வலுப்பெறும் புரெவி புயல் : எந்தெந்த  மாவட்டங்களில்  கனமழை பெய்யும்!

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது . இந்த புயல் காரணமாக டிசம்பர் 2,3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வ மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புரெவி புயல் நாளை இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது. புயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை