நிவர் புயலை தொடர்ந்து உருவாகிறது “புரெவி”

 

நிவர் புயலை தொடர்ந்து உருவாகிறது “புரெவி”

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழக கடற்கரையை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிவர் புயலை தொடர்ந்து உருவாகிறது “புரெவி”

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய புரெவி என்ற பெயர் வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

நிவர் புயலை தொடர்ந்து உருவாகிறது “புரெவி”

ஏற்கனவே கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. இதையடுத்து நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது . இதனால் புதுச்சேரியில் சுமார் ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.