Home இந்தியா கொரோனாவால் விற்பனை மந்தம்.... ரூ.17 கோடி இழப்பை சந்தித்த புரவங்கரா

கொரோனாவால் விற்பனை மந்தம்…. ரூ.17 கோடி இழப்பை சந்தித்த புரவங்கரா

2020 ஜூன் காலாண்டில் புரவங்கரா நிறுவனம் ரூ.16.93 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது.

ரியல் எஸ்டேட் நிறுவனமான புரவங்கரா தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் புரவங்கரா நிறுவனம் ரூ.16.93 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் புரவங்கரா நிறுவனம் ரூ.44 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

புரவங்கா

புரவங்கரா நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த வருவாயாக ரூ.190.53 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் பல மடங்கு குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் புரவங்கரா நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.645.55 கோடியாக உயர்ந்து இருந்தது. கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி புரவங்கரா நிறுவனத்தின் கடன் ரூ.2,521 கோடியாக குறைந்துள்ளது.

அடுக்கு மாடிக்குடியிருப்புகள்

கடந்த ஜூன் காலாண்டில் புரவங்கரா நிறுவனம் மொத்தம் 536 சொத்துக்களை விற்பனை செய்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் 638 சொத்துக்களை அந்நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார். இதேபோல் அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை...

சுகமான தூக்கத்துக்கு முயற்சி செய்ய வேண்டிய 8 வழிகள்!

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே… தூக்கமின்மையால் அவதியுறுகின்றீர்களா? தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புறண்டு படுத்து தவிக்கின்றீர்களா? நாட்டில் பாதி பேர் இப்படித்தான் சரியான தூக்கம்...

”ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்றால் திமுகவிற்கு பீகாரிலிருந்துதான் வேட்பாளர்கள் வரவேண்டும்”

மதுரை விரகனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “திமுகவின் ஐ பேக்கை மக்கள் கோ பேக் என சொல்கிறார்கள். ஐ பேக்கை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. ஐ பேக் கருத்து...

கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி

மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைவதாகவும், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி...
Do NOT follow this link or you will be banned from the site!