புரட்டாசி சனிக்கிழமை – ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி சனிக்கிழமை – ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஈரோடு

புரட்டாசி மாசம் முதல் சனிக்கிழமையான இன்று, ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து வழிபட்டனர்.

புரட்டாசி சனிக்கிழமை – ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோயிலுக்கு படை எடுத்து வருகின்றனர். அதிலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். ஏழரை சனி உள்ளவர்கள் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது.

புரட்டாசி சனிக்கிழமை – ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

அதன்படி இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால், ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு யாகசாலை நடந்தது.
அதன் பின்னர் பெருமாளுக்கு சந்தனம் , பன்னீர் உள்பட 16 வகையான திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. அதையடுத்து, கோட்டை பெருமாள் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

புரட்டாசி சனிக்கிழமை – ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

முன்னதாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கையில் சனிடைசர்கள் தெளிக்கப்பட்டதுடன், உடல் வெப்பநிலையை கண்டறியும் பரிசோதனையும் செய்யப்பட்டது. முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமை – ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்