கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஃப்ர்ஸ்ட் பேட்டிங்

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஃப்ர்ஸ்ட் பேட்டிங்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு போட்டியில் மோதிக்கொள்ளும் அணிகள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இரண்டு அணிகளும் 10 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகள் பெற்றிக்கின்றன. ஆனால், நெட் ரன்ரேட் அடிப்படையில் ஹைதராபாத் டீம் ஐந்தாம் இடத்திலும், பஞ்சாப் டீம் ஆறாம் இடத்திலும் உள்ளன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஃப்ர்ஸ்ட் பேட்டிங்

இன்றைய போட்டியின் வெற்றி என்பது ப்ளே ஆப் சுற்றை நோக்கிச் செல்ல இரு அணிகளும் முக்கியம்.

பஞ்சாப் அணி கடைசியாக ஆடிய போட்டியில் பஞ்சாபை 164 ரன்களுக்குள் சுருட்டி, ஒரு ஓவர் மிச்சமிருக்கும்போதே வெற்றி பெற்றது. அதனால், அது தரும் நம்பிக்கையோடு இன்று களம் காணும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஃப்ர்ஸ்ட் பேட்டிங்

அதே நம்பிக்கை ஹைதராபாத் டீம்க்கும் இருக்கும். ஏனெனில் அதன் கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 11 பந்துகள் மிச்சமிருக்கையில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அசத்தலான வெற்றியை ருசித்திருக்கிறது.

இந்த இரு அணிகளும் முதல் முறை மோதியபோது முதலில் பேட்டிங் ஆடி 201 ரன்களை குவித்தது ஹைதராபாத். அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களே எடுக்க முடிந்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஃப்ர்ஸ்ட் பேட்டிங்

இரு அணிகளும் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து வந்திருக்கின்றன. அதனால், இன்றைய போட்டி விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அதனால் பஞ்சாப் டீம் முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்குகிறது.