பஞ்சாபில் தெய்வ குற்றம் செய்ததாக 11 வயது சிறுமி மீது போலீஸ் வழக்கு…

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ளது ராம்புரா கிராமம். இந்தி கிராமத்தில் சீக்கிய ஆலயம். கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சீக்கிய ஆலயத்தின் நிர்வாகிகள் காவல் நிலையம் சென்று, தங்களது ஆலயத்தின் உள்ளே உள்ள ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் புனித நூலின் சில பக்கங்களை யாரோ கிழித்து விட்டதாக புகார் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் இது தொடர்பாக விசாரணையில் இறங்கினர்.

புனித நூலின் கிழிக்கப்பட்ட பக்கங்கள்

சீக்கிய ஆலயத்தின் உள்ளே சிசிடிவி கேமராக்களின் அனைத்து பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது 11 வயது சிறுமி ஒருத்தி புத்தகத்தின் பக்கங்களை கிழிப்பது தெளிவாக ஒரு வீடியோ பதிவில் தெரிந்தது. இதனையடுத்து அந்த 11 வயது சிறுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுமி அந்த புனித நூலை சுற்றி துணி வைக்க முயற்சி செய்யும் போது புனித நூலின் சில பக்கங்கள் கிழிந்தது சி.சி..டி.வி காட்சிகளில் தெரிந்தது. புனித நூலை கிழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறுமி செய்யவில்லை. இருப்பினும் மத உணர்வு இதில் சம்பந்தப்பட்டுள்ளதால் இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுமிக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

எப்.ஐ.ஆர்.

குருத்வாரா நிர்வாக கமிட்டி இது கூறுகையில், அந்த சிறுமி கடந்த ஒரு மாத காலமாக இங்கு ஆலய பகுதிகளை சுத்தம் செய்து சேவைகளில் ஈடுபட்டு வந்தார் என தெரிவித்தார். கிரந்தி மன்பிரீத் சிங் இது குறித்து கூறுகையில், கடந்த சனிக்கிழமையன்று ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் புனித நூலை ஓதும்போது அதன் பக்கங்கள் கிழிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. குருத்வாரா சாஹிப்பில் சேவை செய்ய வந்த ஒரு சிறுமி இந்த தெய்வ நிந்தனை செயலை செய்ததை நாங்கள் கண்டுபிடித்தோம் என தெரிவித்தார்.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...