#IPL 2021 : பஞ்சாப்பை நொறுக்கி வெற்றி வாகை சூடிய டெல்லி!

 

#IPL 2021 : பஞ்சாப்பை நொறுக்கி வெற்றி வாகை சூடிய டெல்லி!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதின. பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அறுவைசிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் இந்தப் போட்டியில் ஆட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் எவ்வளவு போட்டி விளையாட மாட்டார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இதனால் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Image

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அகர்வால் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர்.
பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களிலும்,கிறிஸ் கெய்ல் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ராபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.இதன்பின் அகர்வாலுடன் சிறிய கூட்டணி அமைத்த டேவிட் மலன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். தனி ஒரு ஆளாக போராடிய கேப்டன் மயங்க் அகர்வால் 37 பந்துகளில் அரைசதம் கடந்தார்.மேலும் இறுதி கட்டத்தில் அசத்திய மயங்க் அகர்வால் 4 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.20ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது.

Image

167 என்ற இலக்குடன் தனது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரிதிவி சா மற்றும் தவான் களமிறங்கினர்.பவர் பிளேவில் அசத்திய டெல்லி 63 ரன்களை சேர்த்தது.22 பந்துகளில் 39 சேர்த்த ப்ரிதிவி சா , ஹர்ப்ரீட் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார்.
இதன் பின் தவான் மற்றும் ஸ்மித் ஜோடி சேர்ந்தனர்.ஸ்மித் தனது பங்கிற்கு 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 35 பந்துகளில் அரைசதம் கடந்தார்.17.4 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அட்டகாசமாக ஆடிய ஷிகர் தவான் 69 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.