அக்டோபர் 15ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு… ஒரு நாளைக்கு 3 மணி நேரம்தான்.. பஞ்சாப் அரசு அறிவிப்பு..

அக்டோபர் 15ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு… ஒரு நாளைக்கு 3 மணி நேரம்தான்.. பஞ்சாப் அரசு அறிவிப்பு..

அக்டோபர் 15ம் தேதி முதல் பஞ்சாபில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் அடைக்கப்பட்டன. லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டதையடுத்து அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. கர்நாடகாவில் அண்மையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்ததால் கர்நாடக அரசு பள்ளிகளை மீண்டும் அடைக்க உத்தரவிட்டது.

அக்டோபர் 15ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு… ஒரு நாளைக்கு 3 மணி நேரம்தான்.. பஞ்சாப் அரசு அறிவிப்பு..
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

இந்த சூழ்நிலையில், பஞ்சாபில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு அக்டோபர் 15ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்காக மீண்டும் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகளுக்கு செல்லலாம். மேலும் மாணவர்களுக்கு வருகை பதிவு கட்டாயம் கிடையாது என தெரிவித்துள்ளது.

அக்டோபர் 15ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு… ஒரு நாளைக்கு 3 மணி நேரம்தான்.. பஞ்சாப் அரசு அறிவிப்பு..
வகுப்பறையை சுத்தம் செய்யும் பணியாளர்

பஞ்சாப் கல்வித்துறை தகவல்படி, பள்ளிகள் தினமும் 3 மணி நேரம் மட்டுமே செயல்படும், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளி, தனிநபர் சுகாதாரம், மாஸ்க் அணிதல், பள்ளியின் உள்பகுதியை சுத்தகரித்தல் போன்ற விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும். ஒரு செக்ஷனுக்கு அதிகபட்சம் 20 மாணவர்கள்தான் இருக்க வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஆசிரியர்களை 2 ஷிப்டுகளாக (தலா 3 மணி நேரம்) வரவழைத்து பாடம் நடத்தலாம் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தவிர கோச்சிங் நிறுவனங்களையும் அக்டோபர் 15ம் தேதி முதல் மீண்டும் திறந்து கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.