மத்திய அரசுடன் மோதல்- சி.பி.ஐ.க்கு அளித்த பொது அனுமதியை திரும்ப பெற்ற பஞ்சாப் !

 

மத்திய அரசுடன் மோதல்- சி.பி.ஐ.க்கு அளித்த பொது அனுமதியை திரும்ப பெற்ற பஞ்சாப் !

பஞ்சாபில் சி.பி.ஐ. எந்தவொரு வழக்குகளையும் விசாரணை செய்ய அளித்திருந்த ஒப்புதலை அம்மாநில அரசு திரும்ப பெற்றுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க வேண்டுமானால் சி.பி.ஐ. அம்மாநில அரசிடம் முதலில் அனுமதி பெற வேண்டும்.

நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன (டி.பி.எஸ்.இ.) சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. தனது அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு பொது ஒப்புதல் அளித்துள்ளன. இதனால் எந்தவொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் வழக்குகளை சி.பி.ஐ.யால் நேரடியாக விசாரிக்க முடியும். இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. ஆட்சி இல்லாத பல மாநில அரசுகள் சி.பி.ஐ.க்கு அளித்து பொது ஒப்புதலை திரும்ப பெற்று வருகின்றன.

மத்திய அரசுடன் மோதல்- சி.பி.ஐ.க்கு அளித்த பொது அனுமதியை திரும்ப பெற்ற பஞ்சாப் !
முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

இதனால் அந்த மாநிலங்களில் எந்தவொரு வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமானால் முதலில் சம்பந்தபட்ட மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் சி.பி.ஐ.க்கு அளித்து இருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றன. தற்போது இந்த பட்டியலில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் அரசும் இடம் பிடித்துள்ளது.

மத்திய அரசுடன் மோதல்- சி.பி.ஐ.க்கு அளித்த பொது அனுமதியை திரும்ப பெற்ற பஞ்சாப் !
சி.பி.ஐ.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு நேற்று டி.பி.எஸ்.இ.) சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. தனது அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அளித்திருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் மோதல் போக்கு நிலவிவரும் சூழ்நிலையில், சி.பி.ஐ. அளித்து இருந்த பொது ஒப்புதலை பஞ்சாப் அரசு திரும்பபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.