நீட் தேர்வை முன்னிட்டு இன்று லாக்டவுன் கிடையாது…. பஞ்சாப் அரசு அறிவிப்பு

 

நீட் தேர்வை முன்னிட்டு இன்று லாக்டவுன் கிடையாது…. பஞ்சாப் அரசு அறிவிப்பு

நீட் தேர்வை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதியன்று (இன்று) லாக்டவுன் கிடையாது என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை அமைப்பு இன்று நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்த உள்ளது. பஞ்சாபில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு எந்தவொரு அசவுகரியம் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக அம்மாநிலத்தில் இன்று (செப்டம்பர் 13) லாக்டவுன் கிடையாது என முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்வை முன்னிட்டு இன்று லாக்டவுன் கிடையாது…. பஞ்சாப் அரசு அறிவிப்பு
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் நாடு தழுவிய லாக்டவுனை மத்திய அரசு அமல்படுத்தியது. இருப்பினும் பின்னர் படிப்படியாக லாக்டவுனை தளர்த்தி விட்டது. தற்போது கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் பகுதிகளில் மட்டுமே லாக்டவுன் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றுகின்றன. மத்திய அரசு லாக்டவுனை தளர்த்திய போதும் பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வாரந்திர லாக்டவுனை அமல்படுத்தின.

நீட் தேர்வை முன்னிட்டு இன்று லாக்டவுன் கிடையாது…. பஞ்சாப் அரசு அறிவிப்பு
தேர்வு எழுதுபவர்கள் (கோப்புப்படம்)

பஞ்சாப் அரசு முதலில் வாரந்திர இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று தனது வாரந்திர லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தியது. அதாவது செப்டம்பர் 30ம் தேதி வரை ஞாயிறு மட்டுமே லாக்டவுன் அமல்படுத்தப்படும் என தெரிவித்தது. தற்போது நீட் தேர்வை முன்னிட்டு இந்த ஞாயிற்றுக்கிழமையன்று லாக்டவுன் கிடையாது. அதேசமயம் அத்தியாவசியமில்லாத பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.