வேளாண் சட்டங்களை ரத்து செய் என்று நீங்க சொல்லுங்க… மோடியின் அம்மாவுக்கு கடிதம் எழுதிய பஞ்சாப் விவசாயி..

 

வேளாண் சட்டங்களை ரத்து செய் என்று நீங்க சொல்லுங்க… மோடியின் அம்மாவுக்கு கடிதம் எழுதிய பஞ்சாப் விவசாயி..

பிரதமரின் காதை பிடித்து திருகி வேளாண் சட்டங்களை ரத்து செய் என்று சொல்லுங்க, நீங்க சொன்னா அவரு செய்வாரு என்று மோடியின் அம்மா ஹிராபென்னுக்கு பஞ்சாப் விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஹர்பிரீத் சிங், வேளாண் சட்டங்களை ரத்துக் செய்ய பிரதமர் மோடிக்கு உத்தரவிடுங்க என்று அவரது தாயார் ஹிராபென்னுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: இந்த கடிதத்தை கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். 3 கருப்பு சட்டங்கள் காரணமாக இந்த குளிர்காலத்தில் தேசத்துக்கும், உலகத்துக்கும் உணவளிக்கும் விவசாயிகள் டெல்லியின் சாலைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வேளாண் சட்டங்களை ரத்து செய் என்று நீங்க சொல்லுங்க… மோடியின் அம்மாவுக்கு கடிதம் எழுதிய பஞ்சாப் விவசாயி..
விவசாயிகள் போராட்டம் (கோப்பு படம்)

இதில் 90-95 வயதுடையவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர். குளிர்ந்த காலநிலை மக்களை நோய்வாய்ப்படுத்துகிறது. அவர்கள் தியாகியாக (இறந்து விட்டார்கள்) கூட இருக்கிறார்கள். இது நம் அனைவருக்கும் கவலை அளிக்கிறது. ஆகையால் நீங்கள் தங்களது மகனின் (மோடி) காதை பிடித்து திருக்கி வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்படி சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த கடிதத்தை நான் மிகுந்த நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்கள் மகன் நரேந்திர மோடி நாட்டின் பிரதமர், அவர் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறலாம்.

வேளாண் சட்டங்களை ரத்து செய் என்று நீங்க சொல்லுங்க… மோடியின் அம்மாவுக்கு கடிதம் எழுதிய பஞ்சாப் விவசாயி..
பிரதமர் மோடி

நான் நினைக்கிறேன், ஒரு நபர் தனது தாயை தவிர வேறு யாரையும் மறுக்க முடியும். ஏனெனில் நம் நாட்டில் தாய் ஒரு கடவுளாக கருதப்படுகிறார். உங்கள் மகன் பிரதமர் மோடி உங்கள் கோரிக்கையை ஒரு போதும் மறுக்க மாட்டார். உங்கள் மகன் உங்கள் பேச்சை கேட்டு இந்த கருப்பு சட்டங்களை ரத்து செய்வார் என்று நான் நம்புகிறேன். முழு நாடும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும். ஒரு தாய் தன் மகனின் காதை திருக்கி உத்தரவு இடலாம். இந்த 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட்டால் அது முழு நாட்டுக்கும் வெற்றியாக இருக்கும், யாரும் தோற்கடிக்கப்பட மாட்டார்கள் என்று அதில் எழுதி இருந்தார்.