பரிசு பொருட்கள், மொய் வேண்டாம்… விவசாயிகளுக்கு நன்கொடை கொடுங்க.. கல்யாண ஜோடி வேண்டுகோள்

 

பரிசு பொருட்கள், மொய் வேண்டாம்… விவசாயிகளுக்கு நன்கொடை கொடுங்க.. கல்யாண ஜோடி வேண்டுகோள்

பஞ்சாபில் ஒரு திருமண ஜோடி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில், தங்களுக்கு பரிசு பொருட்கள், மொய் வேண்டாம் அதற்கு பதிலாக விவசாயிகளுக்கு உதவ நன்கொடை அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிர்க்கட்சிகள் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது நாட்டு மக்களும் ஆதரவு அளிக்க தொடங்கி விட்டனர். பஞ்சாபில் ஒரு கல்யாண வீட்டார், புதுமண தம்பதியினருக்கு பரிசு பொருட்கள் அல்லது மொய் கொடுக்க வேண்டாம் அதற்கு பதிலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக நன்கொடை அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

பரிசு பொருட்கள், மொய் வேண்டாம்… விவசாயிகளுக்கு நன்கொடை கொடுங்க.. கல்யாண ஜோடி வேண்டுகோள்
நன்கொடை பாக்ஸ்

பஞ்சாப் மாநிலம் முக்த்சரில் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமண வீட்டார் டெல்லியில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு உதவ முடிவு செய்தனர். இதனையடுத்து திருமண விழாவில் புதுமண தம்பதியினருக்கு பரிசு பொருட்கள் அல்லது மொய் (பணம்) வழங்குவதற்கு பதிலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ நன்கொடை அளியுங்கள் என்று நன்கொடை பெட்டியையும் வைத்தனர்.

பரிசு பொருட்கள், மொய் வேண்டாம்… விவசாயிகளுக்கு நன்கொடை கொடுங்க.. கல்யாண ஜோடி வேண்டுகோள்
விவசாயிகள் போராட்டம்

மேலும் நடனமாடும் பகுதியில் சிறப்பு நன்கொடை பாக்ஸை வைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களை தாரளமாக நன்கொடை செய்யும்படி கேட்டுக்கொண்டனர். நன்கொடையாக வரும் பணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உணவு, ஆடைகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் என்று அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.