கட்சியின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டுமானால் முதல்வரை மாற்ற வேண்டும்.. பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.

கட்சியின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டுமானால் முதல்வரை மாற்ற வேண்டும்.. பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.

பஞ்சாபில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த மாதம் 29ம் தேதியன்று விஷ சாரயம் குடித்தவர்களில் இதுவரை அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 121 பேர் பலியாகி உள்ளனர். விஷ சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மக்கள் பெரும் துயரத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விஷ சாராயம் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள்ளே உட்கட்சி சண்டைக்கு வழிவகுத்து விட்டது. முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு எதிராக அம்மாநில காங்கிரஸ் எம்.பி. போர்க்கொடி தூக்கியுள்ளார்.

கட்சியின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டுமானால் முதல்வரை மாற்ற வேண்டும்.. பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.

விஷ சாராயம் உயிரிழப்பு தொடர்பாக பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி. பிரதாப் சிங் பாஜ்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிடம் கலால் மற்றும் வரிவிதிப்பு, உள்துறை மற்றும் போலீஸ் உள்ளது. அனைத்து விரல்களும் கலால் துறையை நோக்கி உயர்த்துகின்றன. ஹூச் சோகத்தில் உயிர் இழந்த 121 பேருக்கு நீதி வழங்கப்பட வேண்டுமானால் சி.பி.ஐ. அல்லது அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட வேண்டும்.

கட்சியின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டுமானால் முதல்வரை மாற்ற வேண்டும்.. பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.

பாதல் ஆட்சியில் உருவாகிய சுரங்கம், மதுபானம், கேபிள், மருந்துகள் மற்றும் போக்குவரத்து மாபியாக்கள், கேப்டன் அமரீந்தர் சிங்கின் நிர்வாகத்தின்கீழ் செழித்து வருகிறார்கள். காங்கிரசின் எதிர்காலம் காப்பற்றப்பட வேண்டுமானால் நாம் மாநிலத்தில் தலைமையை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு எதிராக அந்த கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவரை பேசியிருப்பது அந்த கட்சியில் உள்கட்சி பூசல் வெடிக்க தொடங்கியுள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளது.