பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தகுதியானவர் அல்ல.. காங்கிரஸ் எம்.பி. தாக்கு..

 

பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தகுதியானவர் அல்ல.. காங்கிரஸ் எம்.பி. தாக்கு..

சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெற தகுதியானவர் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.

கிரிக்கெட் கடவுள் ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக போட்ட ஒரே டிவிட் அவரை படாதபாடு படுத்தி வருகிறது. இவ்வளவுக்கு அவர் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம் ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்குதான் இந்தியா தெரியும், இந்தியாவுக்காக முடிவு செய்ய வேண்டும், ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்கும் என்று பதிவு செய்து இருந்தார்.

பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தகுதியானவர் அல்ல.. காங்கிரஸ் எம்.பி. தாக்கு..
ஜஸ்பீர் கில்

சச்சின் டெண்டுல்கரின் இந்த டிவிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், வேறு துறை குறித்து கருத்து தெரிவிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சச்சினுக்கு அட்வைஸ் செய்தார். தற்போது பஞ்சாபை காங்கிரஸ் ஜஸ்பீர் கில், பாரத ரத்னா விருதுக்கு சச்சின் டெண்டுல்கர் தகுதியானவர் அல்ல என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தகுதியானவர் அல்ல.. காங்கிரஸ் எம்.பி. தாக்கு..
அர்ஜூன் டெண்டுல்கர்

இது தொடர்பாக ஜஸ்பீர் கில் டிவிட்டரில், சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் அல்ல. பதிலுக்கு ஏதாவது விரும்புவதால் மட்டுமே அவர் அரசாங்கத்துக்கு ஆதரவாக டிவிட் செய்தார். தனது மகன் அர்ஜூன் ஐ.பி.எல்.-ல் தேர்ந்தெடுக்க மட்டுமே சச்சின் விரும்பினார். இந்த மனிதன் (சச்சின்) பாரத ரத்னாவுக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிக்க இதை பொதுமக்களிடம் விட்டுவிட விரும்புகிறேன் என்று பதிவு செய்து இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அர்ஜூன் டெண்டுல்கர் ஐ.பி.எல். வீரர்கள் ஏல பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.