ராஜினாமா அல்லது அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன்… பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்

ராஜினாமா அல்லது அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன்… பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்

நான் ராஜினாமா செய்ய அல்லது என் அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன் ஆனால் விவசாயிகளை பாதிக்கவோ அல்லது அழிக்கவோ விட மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

பஞ்சாபில் சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை மாநிலத்தில் அமல்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், அம்மாநில அரசு மசோதா ஒன்றை தாக்கல் செய்தது. மேலும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் ராஜினாமா செய்ய பயப்பட மாட்டேன். எனது அரசு கலைக்கப்படும் என்று நான் பயப்பட மாட்டேன். அனால் நான் விவசாயிகளை பாதிக்க அல்லது அழிக்க விட மாட்டேன்.

ராஜினாமா அல்லது அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன்… பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்
முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

விவசாய சட்டங்கள் நீக்கப்படவில்லை என்றால், கோபக்கார இளைஞர்கள் வீதிகளுக்கு வந்து விவசாயிகளுடன் இணையலாம். இது குழப்பத்தறிகு வழி வகுக்கும். தற்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள், அமைதியான சூழ்நிலையை தொந்தரவு செய்யும் ஆற்றலை கொண்டுள்ளன. 80 மற்றும் 90 களில் இதுதான் நடந்தது. சீனாவும், பாகிஸ்தானும் ஒன்றுக்கூடி, மாநிலத்தின் அமைதிக்கு எதிரான எந்தவிதமான இடையூறையும் சாதகமாக்கி கொள்ள முயற்சி செய்யும். இது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும்.

ராஜினாமா அல்லது அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன்… பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்
விவசாயிகள் சாலை மறியல்

அதிருப்தி விவசாயிகளுக்கு எனது முழு ஆதரவும் உண்டு. விவசாயிகள் ரெயில் நிறுத்தம் மற்றும் முற்றுகைகளை முடிவுக்கு கொண்டு வந்து மாநில அரசுக்கும், அத்தியாவசிய பொருட்களின் இயக்கத்தை அனுமதிக்கவும் வேண்டும். நாங்கள் உங்களோடு நின்றோம். இப்போது எங்களுடன் நீங்கள் நிற்பது உங்கள் முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.