பிரசாந்த் கிஷோரால் பஞ்சாப் காங்கிரசில் அதிருப்தி… பதறியடித்து விளக்கம் கொடுத்த முதல்வர் அமரீந்தர் சிங்

பிரசாந்த் கிஷோரால் பஞ்சாப் காங்கிரசில் அதிருப்தி… பதறியடித்து விளக்கம் கொடுத்த முதல்வர் அமரீந்தர் சிங்

2022 பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதில் பிரசாந்த் கிஷோருக்கு எந்த பங்கும் இருக்காது என முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தனது அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமனம் செய்தார். பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரசாந்த் கிஷோரால் பஞ்சாப் காங்கிரசில் அதிருப்தி… பதறியடித்து விளக்கம் கொடுத்த முதல்வர் அமரீந்தர் சிங்
பிரசாந்த் கிஷோர்

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பிரசாந்த் கிஷோர்தான் முடிவு செய்வார் என்றும், இதனால் பஞ்சாப் காங்கிரசில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பிரசாந்த் கிஷோர் தலையீடு இருக்காது என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

பிரசாந்த் கிஷோரால் பஞ்சாப் காங்கிரசில் அதிருப்தி… பதறியடித்து விளக்கம் கொடுத்த முதல்வர் அமரீந்தர் சிங்
காங்கிரஸ்

இது தொடர்பாக முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில், எந்தவொரு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக கட்சி தலைமையால் அமைக்கப்பட்ட ஒரு மாநில தேர்தல் குழு உள்ளது. இந்த குழு அனைத்து பெயர்களையும் கருத்தில் கொண்டு இறுதி வேட்பாளர்களை தேர்வு செய்கிறது. இறுதி செய்யப்பட்ட பெயர்கள் பின்னர் ஆய்வுக்காக ஸ்கிரீனிங் கமிட்டிக்கு அனுப்பப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் உள்பட கட்சியின் தலைவர்கள் இந்த கமிட்டியில் உள்ளனர். மத்திய தேர்தல் கமிட்டிதான் இறுதி முடிவு எடுக்கும். இதில் எந்தவொரு தனிநபருக்கும் எந்த பங்கு இல்லை என தெரிவித்தார்.