பஞ்சாப்புக்கு யார் வந்தாலும் கட்டாயம் 14 நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்… முதல்வர் அமரீந்தர் சிங் தகவல்..

பஞ்சாப்புக்கு யார் வந்தாலும் கட்டாயம் 14 நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்… முதல்வர் அமரீந்தர் சிங் தகவல்..

உள்நாட்டு போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து கடந்த 25ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையிலான பஸ்,ரயில் மற்றும் விமான போக்குவரத்து தொடங்கியது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், விமானங்கள், ரயில்கள் மற்றும் பஸ்கள் வாயிலாக உள்நாட்டு பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப்புக்கு யார் வந்தாலும் கட்டாயம் 14 நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்… முதல்வர் அமரீந்தர் சிங் தகவல்..

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தங்களது மாநிலத்துக்கு வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: விமானங்கள், ரயில் அல்லது சாலை வழியாக பஞ்சாப்புக்கு வரும் எவரும் 14 நாடகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சுய விருப்ப படிவத்தை சமர்பிக்க வேண்டும் மற்றும் நுழைவு பகுதியில் கோவா செயலியை தங்களது செயலியை பதவிறக்க செய்ய வேண்டும்.

பஞ்சாப்புக்கு யார் வந்தாலும் கட்டாயம் 14 நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்… முதல்வர் அமரீந்தர் சிங் தகவல்..

ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்களின்படி ஸ்கிரீனிங் மற்றும் சோதனைகள் செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவித்து இருந்தார். முன்னதாக மற்றொரு டிவிட்டர் பதிவில், கோவா செயலி வாயிலாக கோவிட்-19 செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளலாம். மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு இ பாஸ் பெறும் கோவா செயலியை பயன்படுத்தலாம். இதுவரை 23 லட்சம் பஞ்சாபிகள் இந்த செயலியை பதவிறக்கம் செய்துள்ளனர் எனவும் தெரிவித்து இருந்தார்.